ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம்

ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கும் சேவையை ஜூலை 1 முதல் 6 மாத காலத்திற்கு பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கும் சேவை
Published on

புது டெல்லி,

ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம். பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது:-

சேவைக்கட்டணம் ரத்து

இனி பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. வழக்கமாக இதற்காக வசூலிக்கப்படும் ரூ. 75 சேவைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் நடைமுறை

இந்த சிறப்பு சலுகை நாளை (ஜூலை 1, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. வரும் டிசம்பர் 31, 2026 வரை, அதாவது அடுத்த 6 மாத காலத்திற்கு பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். செயலியை பதிவிறக்கம் செய்ய, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரை பார்வையிடலாம். பயனர் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து, கைபேசி எண்ணை உள்ளிட்டு, OTP-ஐ சரிபார்த்து, முக அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

வழக்கமான கட்டணம்

இந்த இலவச சலுகை, புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் நேரடியாக ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆன்லைன் சேவை

டிஜிட்டல் இந்தியாவில் போலி மோசடிகளை தவிர்க்கவும், ஆன்லைன் சேவைகளை பாதுகாப்பாக பெறவும் ஆதாரில் மின்னஞ்சலை இணைப்பது முக்கியம் ஆகும். எனவே, தேவையற்ற சேவைக்கட்டணத்தை தவிர்க்க, இந்த 6 மாத கால இலவச வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது புதிய ஆதார் செயலியில் மின்னஞ்சல் முகவரியை உடனே புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com