

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததுடன், தனது முதல் மனைவி யுடன் மீண்டும் நெருக்கமாக பழகி வந்த கணவனை 2-வது மனைவி திட்டமிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைக்கு காதலனின் நண்பரும், பெண்ணின் 16 வயது மகனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், மனைவி, அவரது காதலன் மற்றும் காதலனின் நண்பர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
16 வயது மகனையும் போலீசார் காவலில் எடுத் துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் உடல் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கால்வாய் அருகே மரப்பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில், லக்னோவைச் சேர்ந்தவர் ராம் கிஷோர் வால்மிகி .இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு சுபியாபானோ (வயது 32). என்ற பெண்ணை விரும்பிய அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே 4 ஆண்டுகளாக காதலித்து, உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முதல் கணவரை பிரிந்த சுபியாபானோவுக்கு 16 வயதில் மகன் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புதிய வாழ்க்கையிலும் திருப்தி கொள்ளாத சுபியா பானோவுக்கு முன்னா என்றழைக்கப்படும் 52 வயதான முச்சாத் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ராம் கிஷோருக்கு நாளடைவில் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராம்கிஷோர் தனது முதல் மனைவியான கவிதா தேவியை மீண்டும் சந்திக்கத் தொடங்கியுள்ளார். அவருக்கு தொடர்ந்து பண உதவியும் செய்து வந்ததாக தெரிகிறது.
ஏற்கனவே தனது 2வது மனைவியின் கள்ளத் தொடர்பு குறித்து ராம்கி ஷோருக்கு தெரிந்திருந்த நிலையில், அவர் முதல் மனைவியுடன் மீண்டும் நெருக்கமாக பழகி வருவது சுபியா பானோவுக்குமேலும் ஆத்திரத்தை ஏற்படுத்திய தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராம்கி ஷோரை கொலை செய்ய சுபியா பானோ திட்டமிட்டமிட்டார். இதற்காக தனது காதலன் முச்சாத் மற்றும் அவரது நண்பரான 40 வயதான முகமது இக் பால்என்ற பசீர்அகமது ஆகி யோருடன் சேர்ந்து சதித்திட் டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 15ம் தேதி அதி காலை வரையிலான நேரத்தில், முச்சாத் மற்றும் முகமது இக்பாலை சுபியா பானோ தனது வீட்டுக்கு வரவழைத் துள்ளார்.
அவர்கள் வீட்டுக்குள் வருவதற்கு வசதியாக கதவையும் திறந்து வைத்தார். அப்போது ராம் கிஷோர் வீட் டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
வீட்டின் கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்ற முச்சாத் மற்றும் முகமது இக்பால். தூங்கிக்கொண்டிருந்த ராம் கிஷோரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். கொலைக்குப் பிறகு வீட்டில் ரத்தக்கறைகள் இருப்பது தெரியாமல் இருக்க தரையை சிமெண்ட் பூசி மறைக்க முயன்றுள்ளனர். மேலும், ரத்தக்கறை படிந்த துடைப்பம், ராம்கிஷோரின் ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப் பட்ட கத்தி ஆகியவற்றையும் மறைத்து வைத்தனர்.
இதன்பிறகு, சுபியாபானோ தனது 16 வயது மகனை வீட்டுக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து நால்வரும் சேர்ந்து ராம்கிஷோரின் உடலை வீட்டில் படுக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிக்குள் மறைத்து வைத்தனர். பின்னர் உடலை வீட்டில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல திட்டமிட்ட அவர்கள், அதை ஒரு ரிக்க்ஷாவில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கால் வாய் பாலத்தின் அடியில் ராம் கிஷோரின்உடலை வீசி விட்டு அவர்கள் சென்று விட் டனர். இந்தநிலையில், செப் டம்பர் 17ம் தேதி ராம் கிஷோரின் முதல் மனைவி கவிதா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாரதிய நியாய சன்ஹிதா வின் 103வது பிரிவு மற்றும் பிறபிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசா ரணை தொடங்கப்பட்டது. கொலைக்குப்பிறகு உடலை ரிக்க்ஷாவில்கொண்டு சென்று வீசியது போலீசாரின் விசாரணையில் முக்கிய தடயமாக அமைந்தது.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய ரிக்க்ஷா சென்றதாக கருதப்பட்ட பாதையில் உள்ள சுமார் 170 முதல் 180 சிசிடிவி கேமராபதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். நான்கு தனிப்படை போலீசார் தொழில்நுட்ப உதவியு டனும், களவிசாரணை மூல மாகவும் தகவல்களை சேகரித்து, ரிக்ஷாவின் இருப் பிடத்தைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சுபியாபானோ,அவரதுகாத லன்முச்சாத்மற்றும் அவரது கூட்டாளியான முகமது இக் பால்என்றபசீர் அகமது ஆகியோரை கைது செய்தனர். 16 வயதான சுபியா பானோ வின் மகனையும் காவலில் வைத்துள்ளனர்.
மேலும், ராம்கிஷோரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி மற்றும் உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தப் ரிக்க்ஷாவையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பாக சுலக்னோ தெற்கு துணை காவல் ஆணையர் முசுமது முஷ்டாக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
2வது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம், கணவன் முதல் மனைவியுடன் மீண்டும் நெருக்கமாக பழகியது காரணமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.