தண்ணீர் திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தண்ணீரை திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தண்ணீர் திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
Published on

குஜராத் மாநிலத்தில் தண்ணீரைத் திருடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் நேற்று, இரு மசோதாக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மசோதாக்களின் படி விவசாயத்திற்கான நீரைத் திருடினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் ஒன்றரை ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்ற விதி மாற்றப்பட்டு, 2 லட்சம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறும்போது, கால்வாய்களிலிருந்து நீர் திருட்டுக்கு "தண்டனையையும் அபராதத்தையும் விதிக்கும் மசோதா விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு எதிரானது என்றும் இது ஒரு "கறுப்புச் சட்டம்" என்றும் அது "பிரிட்டிஷாரை கூட வெட்கப்பட வைக்கும்" என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com