சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர் - வீடியோ வெளியானதால் பரபரப்பு

சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவரின் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர் - வீடியோ வெளியானதால் பரபரப்பு
Published on

வசாய்,

மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பால்கர் மாவட்டம் வசாய்-நாலச்சோப்ரா ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது திடீரென நடுவழியில் நின்றது.

பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழித்து விட்டு வந்தபின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com