இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அமெரிக்க நிறுவனம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு நான்காண்டுகளுக்கு 1.18 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்க நிறுவனம் கொடுத்திருப்பது வெளிவந்துள்ளது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அமெரிக்க நிறுவனம்
Published on

வாஷிங்டன்

இத்தகவலை அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி அது எழுதியுள்ள கடிதத்தில் சிடிஎம் ஸ்மித் எனும் அமெரிக்க நிறுவனத்தின் இந்தியக் கிளையைச் சேர்ந்த ஊழியர்கள் நன்கு அறிந்தே காண்டிராக்டுகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளது.

இந்த லஞ்சம் வழங்கப்பட்ட காலம் 2011 முதல் 2015 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தது என்றும் அத்துறை தெரிவித்தது. லஞ்சம் மொத்த காண்டிராக்ட் மதிப்பில் நான்கு சதவீதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த லஞ்சம் எந்த வேலையையும் செய்யாத காண்டிராக்டர்களின் கணக்குகளில் போடப்பட்டுள்ளது என்றும் அந்த கடிதம் குறிப்பிடுகிறது. இதே போல கோவா மாநிலத்தில் 25,000 அமெரிக்க டாலர்களை தண்ணீர் விநியோகம் தொடர்பான திட்டம் ஒன்றை பெறுவதற்காக லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்றும் சட்டத்துறை குறிப்பிட்டுள்ளது.

நிறுவனம் குறுக்கு வழியில் ஈட்டிய பணத்திற்கு வரிச் சலுகை கேட்க மாட்டோம் என்று கூறியுள்ளது. மேலும் லஞ்சக் குற்றச்சாட்டு காரணத்தால் உலக வங்கி சிடிஎம் ஸ்மித் நிறுவனத்தை தடை செய்துள்ளது.

இத்தகவல் வெளியானதை அடுத்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com