டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இரவு விருந்து

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இரவு விருந்து
Published on

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மற்றும் சபர்மதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களில் நேற்று கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் இன்று இந்திய பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

இந்தநிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். இரவு அமெரிக்க அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது.

முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா மற்றும் மத்திய மந்திரிகள், சமையல்காரர் விகாஸ் கன்னா, கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா, தெலுங்கான முதல்-மந்திரி கே.எஸ்.சந்திரசேகர ராவ், அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால். அரியான முதல்-மந்திரி மனோகர் லால் கட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com