மத்திய மந்திரி ஜெய்சங்கரை நாளை சந்திக்கிறார் ஆண்டனி பிளிங்கன்

பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மந்திரி ஜெய்சங்கரை நாளை சந்திக்கிறார் ஆண்டனி பிளிங்கன்
Published on

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் நாளை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com