ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை குடும்பத்துடன் பார்வையிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார்
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை குடும்பத்துடன் பார்வையிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி
Published on

ஜெய்ப்பூர்,

4 நாட்கள் பயணமாகஅமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அசர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர், நேற்று மாலை ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

இந்நிலையில், இந்திய பயணத்தின் 2வது நாளான இன்று ஜே.டி.வான்ஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அங்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் ஆம்பர் கோட்டையை ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் பார்வையிட்டார். மேலும், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் அவர் குடும்பத்துடன் கண்டு களித்தார்.

ஜெய்ப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜே.டி.வான்ஸ் நாளை ஆக்ரா செல்கிறார். அங்கு தாஜ்மகாலை அவர் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com