அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வருகை

ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வருகை
Published on

டெல்லி,

4 நாட்கள் பயணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.

டெல்லி விமான நிலையம் வந்த ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை விமான நிலையம் சென்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் வரவேற்றார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர், இன்று மாலை ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு வர்த்தகம், வரிவிதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது. அதன்பின்னர், ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினர். தற்போது அந்த வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பின் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் ஜெய்ப்பூர் செல்கிறார். நாளை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். பின்னர், நாளை மறுதினம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்கிறார். பின்னர், மீண்டும் ஜெய்ப்பூர் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து 24ம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com