மருத்துவ கருத்தரங்குகளில் ஆல்கஹால் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் - சுகாதார சேவைக்கான பொது இயக்குனர் அறிவுறுத்தல்

சுகாதார பணியாளர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அதுல் கோயல் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கருத்தரங்குகளில் ஆல்கஹால் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் - சுகாதார சேவைக்கான பொது இயக்குனர் அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

மருத்துவ கருத்தரங்குகள், செமினார்கள் உள்ளிட்டவற்றில் ஆல்கஹால் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என சுகாதார சேவைக்கான பொது இயக்குனர் அதுல் கோயல் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவ அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 63 சதவீத மரணங்கள் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களால் ஏற்படக் கூடியது எனவும், இருதய சார்ந்த நோய்களால் 27 சதவீத நோய்கள் ஏற்படுவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

புகையிலை, மதுப்பழக்கம் மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகியவற்றால் பெரும்பாலான தீவிர நோய்கள் ஏற்படுவதாக தெரிவித்த அவர், பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கும் இதர நோய்களுக்கும் ஆல்கஹால் காரணமாக அமைவதாக தெரிவித்தார்.

எனவே சுகாதார பணியாளர்கள் என்ற முறையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ள அவர், மருத்துவ கருத்தரங்குகள், செமினார்கள் போன்றவற்றில் எந்த விதத்திலும் ஆல்கஹால் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com