வாட்ஸ் அப் சேவை முடங்கியதால் பயனர்கள் அவதி

வாட்ஸ் அப் செயலியில் தகவல்களை அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது.
வாட்ஸ் அப் சேவை முடங்கியதால் பயனர்கள் அவதி
Published on

புதுடெல்லி,

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், இன்று இந்தியாவில் திடீரென முடங்கியது. வாட்ஸ் அப் செயலியில் தகவல்களை அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர். இதுகுறித்து நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர் கூறுகையில், சுமார் 81 சதவீத பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், 16 சதவீதம் பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் முடக்கத்திற்கான காரணம் குறித்து அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இந்தியா முழுவதும் பல இடங்களில் இன்று யு.பி.ஐ.(UPI) சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com