ஆக்சிஜன் சப்ளைக்காக ஒடிசா முதல்-மந்திரிக்கு உத்தவ் தாக்கரே நன்றி

மராட்டியத்துக்கு ஆக்சிஜன் வழங்கியதற்காக ஒடிசா முதல்-மந்திரிக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் சப்ளைக்காக ஒடிசா முதல்-மந்திரிக்கு உத்தவ் தாக்கரே நன்றி
Published on

மும்பை,

மராட்டியத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்தற்காக ஒடிசா முதல்-மந்திரி நவின் பட்நாயக்கிற்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்து உள்ளார். இது குறித்து முதல்-மந்தி அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இக்கட்டான சூழலில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, ஒடிசாவில் இருந்து மராட்டியத்துக்கு ஆக்சிஜன் வழங்கி, அனுப்பி வைக்கவும் உதவி செய்த அம்மாநில முதல்-மந்திரி நவின் பட்நாயக்கிற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே போனில் அழைத்து நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com