உத்தர பிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்கு பதிவு

உத்தர பிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்கு பதிவு
Published on

முசாபர்நகர்,

சவுக் வட்டாரத்தில் வசிக்கும் சமீம் அகமது, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் நாசியா பர்வீன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சமீம் அகமது, அவரது மனைவியின் தாயாரிடம் வரதட்சனை கேட்டு உள்ளார். வரதட்சனை தராவிட்டால் முத்தலாக் கூறி விவகாரத்து செய்துவிடுவேன் என்று நாசியா பர்வீனை மிரட்டியுள்ளார்.

இது குறித்து, முத்தலாக் தடைச்சட்ட மசோதாவின் கீழ் நாசியா பர்வீன் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த புகாரை போலீசார் ஆரம்பத்தில் ஏற்க மறுத்ததாக குற்றம் சாட்டிய நாசியா பர்வீன், காவல் ஆணையத்தை அணுகியுள்ளார்.

இதையடுத்து, உத்தர பிரதேச மாநில பெண்கள் ஆணையத்தின் உத்தரவின் பேரில், சமீம் அகமது மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி அனில் கபர்வன் தெரிவித்தார்.

மேலும், தன்னை விவாகரத்து செய்ய தூண்டியதாக சமீம் அகமதுவின் சகோதரி மீதும் நாசியா பர்வீன் புகார் கூறியதை அடுத்து, அவருடைய சகோதரி மீது வேறொரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com