உத்தரபிரதேம்: 14 கொலைகள் செய்த நபர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 கொலைகள் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேம்: 14 கொலைகள் செய்த நபர் கைது
Published on

மணிப்பூரி,

உத்தரபிரதேச மாநிலம் கோத்வாலி பகுதியில் அடுத்தடுத்து 14 கொலைகள் செய்த கவுரவ் சவுகானை உள்ளூர் போலீசார் இன்று கைது செய்தனர். அவன் இந்த கொலைகளுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில் கோத்வாலி பகுதியில் தொடர்ந்து 14 கொலை செய்து தலைமறைவாக இருந்து போலீசாருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த கவுரவ் சவுகான் இன்று கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவன் மேலும் 4 கொலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com