உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: 181 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது- அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 181 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்து உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறினார்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
Published on: 

சட்டசபை தேர்தல்

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சியான சமாஜ்வாடி தீவிர வியூகம் வகுத்து வருகிறது. காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சமாஜ்வாடி, சட்ட சபை தேர்தலில் அந்த கட்சியுடன் இணைந்து களம் காண இருப்பதாக அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.டெல்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது காங்கிரசுடனான தொகுதி பங்கீடு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

181 இடங்கள்

அதன்படி, உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை கேட்கிறதா? என கேட்கப்பட்டது. அதற்கு அகிலேஷ் யாதவ், ‘அதைவிட அதிகம்' என்றார்.உடனே, அப்படியானால் 200 தொகுதிகள் கேட்கிறதா? என்ற கேள்விக்கு, 'அதை விட கொஞ்சம் குறைவு' என்றார். அதற்கு அகிலேஷ் யாதவை பேட்டி கண்டவர், '180 இடங்களா?' என்ற வினவ, 'ஒன்றை சேர்த்துக்கொள்ளுங்கள்' என்றார்.இதன் மூலம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபையில் 181 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மாயாவதியுடன் கூட்டணியா?

மேலும் அவர் கூறும்போது, 'நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்து விட்டோம். சமாஜ்வாடியும், காங்கிரசும் இணைந்த இந் தியா கூட்டணி, பா.ஜனதாவை வீழ்த்தும்' என்றும் தெரிவித்தார்.இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி குறித்து பரிசீலிக் கப்படுகிறதா? என்று அகிேலஷ் யாதவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், 'ஏற்கனவே ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கும்போது, மற்ற கூட்டணிகளைப்பற்றி சிந்திப்பதில்லை. காங்கிரசுடனான இந்தியா கூட்டணி, முன்பு நமக்கு இருந்த அதே கூட்டணிதான். அதில் எந்த மாற்றத்தையும் நான் காண வில்லை' என்று பதிலளித்தார்.

கூட்டணிகளை உருவாக்குவதில் சமாஜ்வாடிக்கு நல்ல அனுபவம் உண்டு என தெரிவித்த அகிேலஷ் யாதவ், அம்பேத்கரின் கொள்கைகளை நம்பும் மக்களை ஒன்றிணைத்துள்ளதாகவும் கூறினார்

X