மீரட் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி...!

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற ஜூலை 27-ந் தேதி மாமல்லபுரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: ANI 
Image Courtesy: ANI 
Published on

லக்னோ,

சென்னையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.

இந்திராகாந்தி மைதானத்தில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது.

அந்த வகையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரத்தை வந்தடைந்துள்ளது. இதனை செஸ் கிராண்ட்மாஸ்டர் தேஜஸ் பக்ரேவிடமிருந்து அம்மாநில மந்திரி சோமேந்திர தோமர் பெற்றுக்கொண்டா. ஆக்ரா,கான்பூர்,லக்னோ ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஒலிம்பியாட் ஜோதி செல்ல உள்ளது. வருகிற ஜூலை 27-ந் தேதி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com