டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை உத்தர பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 255 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லி சென்றுள்ளார்.

2 நாள் பயணமாக சென்றுள்ள அவர் நேற்று தலைநகரில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com