உத்தரப்பிரதேசம்: கலப்பட தேயிலை தயாரித்த நிறுவனத்திற்கு சீல்

அந்த நிறுவனம் எந்தவித உரிமமும் இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கலப்பட தேயிலை தயாரித்த நிறுவனத்திர்கு சீல் வைக்கப்பட்டது.
சீல் வைப்பு
Published on

லக்னோ,

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கலப்பட தேயிலை தயாரித்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ரகசிய தகவல்

உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கலப்படமான முறையில் தேயிலைத்தூள் தயாரிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஒரு சிறப்பு படை அமைத்து அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

நிறுவனத்திற்கு சீல்

அப்போது அந்த நிறுவனம் எந்தவித உரிமமும் இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரசாயனங்கள் கலந்து தேயிலை தயாரிப்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனதிற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகள் அங்கிருந்த 15 கிலோ தேயிலை உள்பட ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள கலப்பட தேயிலை மற்றும் போலி லேபிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com