திடீரென மயங்கி விழுந்த உ.பி. காங்கிரஸ் தலைவர் - மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அஜய் ராய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திடீரென மயங்கி விழுந்த உ.பி. காங்கிரஸ் தலைவர் - மருத்துவமனையில் அனுமதி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் (வயது 56). இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், அஜய் ராய்க்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லக்னோவில் உள்ள வீட்டில் இருந்தபோது நேற்று மாலை 6 மணியளவில் அஜய் ராய் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அஜய் ராய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com