

லக்னோ,
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி, தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என விரும்பினர். திருமண நாளில் ஒரு திரில் இருக்க வேண்டும் என நினைத்த அவர்களுக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியது.
சாதாரண கல்யாண மண்டபங்களை தவிர்த்துவிட்டு, அந்த தம்பதி தங்களின் திருமணத்திற்காக விசித்திரமான இடத்தை தேர்வு செய்தனர். இதற்காக, அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுடுகாட்டை தேர்ந்தெடுத்தனர்.
சுடுகாட்டின் நடுவே தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்திற்கு 50 விருந்தினர்கள் வரை வந்திருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மயானத்தில் எதிர்மறை ஆற்றல் உள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டது தவறு. மேலும் திருமணம் என்பது விளையாட்டு அல்ல. மயானத்தில் திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை பாழாகி விடும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.