மரணத்திலும் பிரிவில்லை...! உயிர் தோழனுடன் உடன் கட்டை ஏறி உயிர்விட்ட நண்பன்...!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மரணத்திலும் பிரிவில்லை...! உயிர் தோழனுடன் உடன் கட்டை ஏறி உயிர்விட்ட நண்பன்...!
Published on

லக்னோ

உத்தரப்பிரதேசம் பெரோஷாபாத் மாவட்டத்தில் உள்ள மதிய நாடியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (40). அசோக் குமாரின் நண்பர் கவுரவ் சிங்(42). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் அடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அவர் இறந்தது குறித்து கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் வசிக்கும் கவுரவ் அசோக் குமார் ஊருக்கு வந்தார். நண்பனின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். இதையடுத்து அசோக்குமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

பின்னர் அங்கிருந்து உறவினர்கள் அனைவரும் வீடு திரும்ப ஆரம்பித்தனர். ஆனால் நண்பனின் எரிந்த சடலத்தை பார்த்தவாறு கவுரவ் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். திடீரென கவுரவ் தன் நண்பரின் எரிந்து கொண்டிருந்த சிதையின் மீது குதித்துவிட்டார். இதனை பார்த்தவர்கள் ஓடி வந்து கவுரவை மீட்டனர்.

ஆனால் கவுரவ் 90 சதவீத காயம் அடைந்தார். இதையடுத்து கவுரவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கவுரவ் உயிரிழந்து விட்டார். இதையடுத்து கவுரவ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com