உ.பி. அரசுப்பள்ளியில் 51 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்! தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டு அந்த அறைக்கு சென்றபோது, ​​அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
உ.பி. அரசுப்பள்ளியில் 51 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்! தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் விலையுயர்ந்த மதுபானங்கள் அடங்கிய ஏராளமான அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குஷிநகரில் உள்ள தமுக்கி ராஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியின் சமையல் அறையில் மதுபானங்கள் அடங்கிய 52 மதுபான பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த போது, அந்த அறைக்கு சென்றபோது, அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்களும் அங்கு வந்தனர்.இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மதுபாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த பகுதி பீகார் எல்லையை ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியிலேயே மது கடத்தல்காரர்கள் மதுபாட்டில்களை வைத்திருந்து கடத்தினரா என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளியில் சில கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அந்த அறை பொருட்களை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது, அதன் சாவி கிராம தலைவரிடம் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மறுபுறம், அரசுப் பள்ளியில் மதுபானம் பதுக்கி இருப்பது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரித்தேஷ் குமார் சிங் கூறுகையில், பள்ளியில் இருந்து 51 மதுபானப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலால் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பீகாரில் மதுவிலக்குக்குப் பிறகு, ஆம்புலன்ஸ்களிலும், சில சமயங்களில் மருந்துகளுக்கு நடுவிலும் மறைத்து வைத்து மது கடத்தல்காரர்கள் உ.பி.யில் இருந்து பீகாருக்கு மதுபானங்களை கடத்துகின்றனர். முதலில் உ.பி.-பீகார் எல்லையில் இருப்பு வைத்து, அதன் பின், சந்தர்ப்பம் பார்த்து, பீகாருக்குள் மதுபானம் கடத்தப்படுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com