உத்தர பிரதேசம்: காணாமல் போன 8-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை

உத்தர பிரதேத்தில் காணாமல் போன 8-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம்: காணாமல் போன 8-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமானார். ஆடுகளை தேடி வீட்டை விட்டு சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com