உத்தர பிரதேசம்: காதலுக்கு எதிர்ப்பு... இளம்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய சகோதரர்கள்

அக்காவை கொலை செய்த பின்னர் அவரது உடலை தூக்கில் தொடங்கவிட்டு தற்கொலை போல் 2 தம்பிகளும் நாடகமாடியுள்ளனர்.
உத்தர பிரதேசம்: காதலுக்கு எதிர்ப்பு... இளம்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய சகோதரர்கள்
Published on: 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் உள்ள ஜகோன் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குஷி பிந்த், கடந்த 4-ந்தேதி அவரது வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர்கள் 2 பேர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து போலீசார் குஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குஷி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து குஷியின் குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குஷியை கொலை செய்ததாக அவரது இளைய சகோதரர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து குஷியின் சகோதரர்களான சுராஜ் பிந்த்(வயது 18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்களது அக்கா குஷி, ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அந்த வாலிபருடன் குஷி பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று குஷி அந்த வாலிபருடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது 2 தம்பிகளும் சேர்ந்து ஆத்திரத்தில் குஷியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை தூக்கில் தொடங்கவிட்டு தற்கொலை போல் நாடகமாடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

X