உத்தரபிரதேசத்தில் போலீஸ் ஜீப் பசுவை பாதுகாக்க முயற்சித்த போது பெண் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் போலீஸ் ஜீப் பசுவை பாதுகாக்க முயற்சித்த போது பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தில் போலீஸ் ஜீப் பசுவை பாதுகாக்க முயற்சித்த போது பெண் உயிரிழப்பு
Published on

லக்னோ,

பாஸ்தி மாவட்டம் ஹராய்யாவில் சாலையில் உஷா தேவி என்பவர் தன்னுடைய பேத்திகளுடன் நடந்து சென்று உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த போலீஸ் ஜீப் அவர் மீது மோதியது. அதில் உஷா தேவி உயிரிழந்தார். அவருடைய பேத்திகள் உள்பட 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாலையில் சென்ற பசுவை பாதுகாக்க போலீஸ் ஜீப்பை ஓட்டிய கான்ஸ்டபிள் முயற்சி செய்து உள்ளார். அப்போது ஜீப் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றவர்கள் மீது மோதிவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com