உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,473 பேருக்கு கொரோனா தொற்று

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,473 பேருக்கு கொரோனா தொற்று
Published on

லக்னோ,

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக 4,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,362 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 50 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,778 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 40,191 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 55,393 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com