உத்தர பிரதேசம்: கான்ஸ்டபிள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றதால் அதிர்ச்சி

நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்: கான்ஸ்டபிள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றதால் அதிர்ச்சி
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Admit Card) வழங்கப்பட்டது. இந்த அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஒரு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை உத்தரப் பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியம் (UPPRB) வழங்கியுள்ளது. அந்த அனுமதிச் சீட்டிற்கான தேர்வு மையம் கன்னோஜ் திர்வா பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று நடைபெற்ற தேர்வில், அந்த அனுமதிச் சீட்டைக் கொண்டு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் யாரும் தேர்வு எழுத வரவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து யாரோ சிலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com