உ.பி.யில் அதிர்ச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன்

சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
உ.பி.யில் அதிர்ச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன்
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் மனியர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கும் கிராமத்தில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன் அக்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், அதை வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளான்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com