உத்தர பிரதேசம்: காசியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
உத்தர பிரதேசம்: காசியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக கட்டிடத்தில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காசியாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com