உத்தர பிரதேசத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உத்தர பிரதேசத்தில் தற்போது 1,06,276 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 7,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 172 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,760 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 17,668 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,34,176 ஆக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது 1,06,276 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக உத்தர பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com