உத்தர பிரதேசம்: டிராக்டர் மீது கார் மோதல்; 4 பக்தர்கள் பலி

பீகாரில் சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
குஷிநகர்,
உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இருந்து சிலர் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுடைய கார் குஷிநகர் மாவட்டத்தின் பதிஹர்வா காவல் நிலைய பகுதியில் வந்தபோது, 4 வழி சாலையில் பாகி குடி என்ற பகுதியில் டிராக்டர் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், கிராம தலைவர் மனோஜ் குமார், கிராம வளர்ச்சி அதிகாரியான சுஜித் ஜெய்ஸ்வால், ராம் கரண் குப்தா மற்றும் ஆசிரியரான கைலாஷ் மணி திரிபாதி ஆகிய 4 பேர் பலியானார்கள். அவர்கள் தவிர, காயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story






