உத்தர பிரதேசம்: விபத்தில் சிக்கிய லாரி - வாளிகளில் டீசலை பிடித்துச் சென்ற கிராம மக்கள்

போலீசார் வருவதைக் கண்டதும் டீசலை பிடித்துக் கொண்டிருந்த கிராம மக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
உத்தர பிரதேசம்: விபத்தில் சிக்கிய லாரி - வாளிகளில் டீசலை பிடித்துச் சென்ற கிராம மக்கள்
Published on: 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முகல்சராய் பகுதியில் இருந்து டீசலை ஏற்றிக்கொண்டு ஒடிசா நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்திற்குள்ளானது.

இதனால் லாரியில் கொண்டு செல்லப்பட்ட டீசல் சாலையில் கொட்டி ஆறாக ஓடத் தொடங்கியது. இதனிடையே, விபத்து குறித்து அறிந்து அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கைகளில் வாளிகளோடு ஓடி வந்து, லாரியில் இருந்து சிந்திய டீசலை போட்டி போட்டுக் கொண்டு பிடித்துச் சென்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதைக் கண்டதும் டீசலை பிடித்துக் கொண்டிருந்த கிராம மக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். சாலையில் டீசல் சிந்தியதால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். விபத்தில் சிக்கிய லாரி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட பின்னர், சாலையில் மீண்டும் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com