மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த உ.பி. முதல்-மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு நேற்றிரவு 'ஹேக்’ செய்யப்பட்டது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

லக்னோ,

நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுக்கென்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் வைத்துள்ளன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு உள்ளது. சிஎம்ஆபிஸ்உபி (CMOfficeUP) என்ற அந்த டுவிட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.

இந்த சூழலில், உத்தரபிரதேச முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு நேற்றிரவு ஹேக் செய்யப்பட்டது. தொடர்ந்து சில மணி நேரத்திற்கு டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கில் இருந்து பல டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து டூவிட்கள் பதிவிடப்பட்டன. ஹேக் செய்யப்பட்ட முதல்-மந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தற்போது சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் இருந்த அனைத்து டுவீட்களும் நீக்கப்பட்டன. முதல்-மந்திரியின் முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசாங்கத் துறை அல்லது செல்வாக்கு மிக்க ஆளுமைகளின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, டிசம்பர் 2021 இல், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்டெடுக்கப்பட்டபோது, கிரிப்டோகரன்சியை ஊக்குவிக்கும் டுவீட் ஏற்கனவே அந்த டுவிட்டரில் பகிரப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com