உ.பி: கோரக்பூரில் கல்லூரி கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இருவர் படுகாயங்களுடன் மீட்பு!

உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் ஒரு இஸ்லாமிய கல்லூரியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
உ.பி: கோரக்பூரில் கல்லூரி கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இருவர் படுகாயங்களுடன் மீட்பு!
Published on

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், இஸ்லாமிய வணிகக் கல்லூரியின் மேற்கூரை நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.

கட்டுமானப் பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு இடிபாடுகளுக்குள் இருவர் மாட்டிக்கொண்டனர். அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பேரிடர் மீட்புப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். கடும் சிரமத்துக்கு இடையே இடிபாடுகளுக்குள் புதைந்திருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று மாலையில் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, தீயணைப்பு சேவை, பேரிடர் மீட்புப்படை உடன் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கியது என்று கூறப்பட்டது.

கட்டிட விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று முதல் மந்திரி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com