உத்தரபிரதேசத்தில் பொதுவெளியில் கணவனை காலணியால் சரமாரியாக தாக்கிய மனைவி - போலீஸ் வழக்குப்பதிவு

பொதுவெளியில் பெண் ஒருவர் தனது கணவனை காலணியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
உத்தரபிரதேசத்தில் பொதுவெளியில் கணவனை காலணியால் சரமாரியாக தாக்கிய மனைவி - போலீஸ் வழக்குப்பதிவு
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியில், பெண் ஒருவர் சாலையில் பலர் முன்னிலையில் தனது கணவரை காலணியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கணவன், மனைவி இருவருக்கும் இடையில் வரதட்சணை, வன்கொடுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு இருவரும் தங்கள் ஊருக்குச் சென்ற போது, இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, தனது காலில் இருந்த காலணியை கழட்டி பொதுவெளியிலேயே தனது கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். அவர் மட்டுமின்றி அவருடன் வந்த மற்றொரு பெண்ணும், அந்த நபரை தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதையடுத்து இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com