கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் கேபினட் மந்திரி உயிரிழந்தார்.
கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்நயாத் தலைமையிலான மந்திரி சபையில் தொழில்துறை கல்வி அமைச்சராக இருந்தவர் கமல் ராணி வருண். 62 வயதான இவருக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்தே காணப்பட்டது. நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் கடும் முயற்சிகள் எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று கமல் ராணி வருண் உயிரிழந்தார்.

மந்திரி கமல் ராணி வருண் உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com