உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு: 6 கடற்படை வீரர்கள் மாயம்

உத்தரகாண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய கடற்படை வீராகள் 6 போ மாயமாகினா.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட குழு, மலையேற்றத்தில் ஈடுபட்டது. கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இந்த குழு, நேற்று திரிசூல மலையில் ஏற முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தேடுதல் பணி நடை பெற்றது. அதில் 5 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற 6 வீரர்களும் மலையேற்ற உதவியாளரும் நேற்று காலை முதல் மாயமாயினர். 15 பேர் கொண்ட குழுவினர், எஞ்சிய வீராகளையும் மலையேற்ற உதவியாளரையும் தேடும் பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com