உத்தரகாண்ட் : பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் : பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
Published on

உத்தரகாண்ட், 

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் சேடகான்-மிடார் சாலை உள்ளது. இந்த சாலையில் இன்று அதிகாலை பிக்-அப் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் 8 பேர் பயணம் செய்தனர். இவர்கள் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் தவறாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதன் மீது மோதிவிடாமல் இருக்க முற்பட்டபோது வாகனம் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு உயிரிழந்தனர். இதில் ஒரு தம்பதி மற்றும் அவர்களின் குழந்தை என ஒரு குடும்பமே பலியானதாக நைனிடால் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரஹலாத் நாராயண் மீனா தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com