

டேராடூன்,
உத்தரகாண்டில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பிற விபத்துகளும் ஏற்பட்டன.
இந்த நிலையில், டேராடூன் மாவட்ட மாஜிஸ்திரேட் வெளியிட்டு உள்ள உத்தரவில், உத்தரகாண்டில் அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளும் தங்களுடைய போனை சுவிட்ச் ஆப் செய்ய கூடாது (அவசரகாலம் தவிர்த்து) என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனை மீறும் அதிகாரிகள் மீது பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.