உத்தரகாண்ட்: கேதர்நாத் கோவில் அருகே பனிச்சரிவு

கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கோவில் அருகே உள்ள மலையில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேதர்நாத் கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காந்தி சரோவர் பகுதியில் இன்று காலை 5 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பனிச்சரிவு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com