உத்தரகாண்ட்: பத்ரிநாத் கோவில் மீண்டும் திறப்பு

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
உத்தரகாண்ட்: பத்ரிநாத் கோவில் மீண்டும் திறப்பு
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்திரிநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் நுழை வாயில்கள் குளிர்காலத்தில் மூடி வைக்கப்படும். சுமார் 6 மாத கால இடைவெளிக்குப் பின்பு நேற்று பத்ரிநாத் செல்லும் நுழை வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்காக அதிகாலையிலேயே வேத சடங்குகள் நடந்தன.

பின்னர் நுழைவாயில் திறக்கப்பட்டதும் பக்தர்கள் கோவிலில் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மற்றும் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் மகேந்திர பட் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com