உத்தராகண்ட்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்; 5 பேர் பலி

சம்பவம் பற்றி அறிந்து மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு சென்றனர்.

உத்தராகண்ட்:  பள்ளத்தில் கவிழ்ந்த கார்; 5 பேர் பலி
Published on

நைனிடால்

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் பவாலி பைபாஸ் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 5 பேர் அதில் பயணம் செய்தனர்.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்து மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு சென்றனர்.

அனைவரையும் உடனடியாக மீட்டு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர்கள் எல்லோரும் மரணமடைந்து விட்டனர். அவர்களில் கார் ஓட்டுநர் உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com