

சமோலி,
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கனமழை காரணமாக அப்பகுதியில் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சமையலறைக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் அப்பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பாலங்கள் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.