உத்தரகாண்ட் வெள்ளம் : 19 பேர் பலி; 200 பேர் மாயம் ; ராகுல்காந்தி இரங்கல்

உத்தரகாண்ட் வெள்ளம் : 18 பேர் பலி; 200 பேர் மாயமானார்கள் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக மருத்துவப் படையினர் உட்பட ராணுவத்தின் குழுக்களும் தபோவன் பகுதிக்கு வந்துள்ளன.
உத்தரகாண்ட் வெள்ளம் : 19 பேர் பலி; 200 பேர் மாயம் ; ராகுல்காந்தி இரங்கல்
Published on

தெஹ்ராடூன்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நந்தா தேவி பனிப்பாறை உடைந்ததில் குறைந்தது 19 பேர் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர்.

தவுலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வெள்ளத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டது.வெள்ளத்தால் என்டிபிசியின் தபோவன்-விஷ்ணுகாட் ஹைட்ல் திட்டம் மற்றும் ரிஷி கங்கா ஹைட்ல் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுரங்கத்தில் வேலைபார்த்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.தபோவனில் சுரங்கப்பாதையில் குறைந்தது 34 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி), தேசிய பேரிடர் படை (என்.டி.ஆர்.எஃப்) ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மீட்புப் பணிகளில் உதவுவதற்காக மருத்துவப் படையினர் உட்பட ராணுவத்தின் குழுக்களும் தபோவன் பகுதிக்கு வந்துள்ளன.

காணாமல் போனவர்களின் விவரங்களை உத்தரகாண்ட் போலீசார் வெளியிட்டுள்ளனர், 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு பின்னர் காணாமல் போன 202 பேரின் விவரங்களை உத்தரகாண்ட் போலீசார் வெளியிட்டனர்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) மி -17 மற்றும் சினூக் ஹெலிகாப்டர்களை வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரணப் பணிகளை எந்தவித இடையூறும் இன்றி மேற்கொள்ளுமாறு ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்

உத்தரகாண்ட் பனிப்பாறை வெடித்து வெள்ளம் ஏற்பட்டதில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்களுக்கு நிவாரணப் பணிகளில் எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com