நீள கூந்தல் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த உத்தரகாண்ட் பெண்

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 9 அடி நீள தலைமுடி இருக்கிறது. இதற்காக அவர் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
நீள கூந்தல் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த உத்தரகாண்ட் பெண்
Published on

கின்னஸ் உலக சாதனை நிறுவனம், உலகிலேயே அதிக நீளமான கூந்தல் கொண்ட பெண் என்ற சாதனையை உத்தரகாண்ட் பெண் ரேணுவுக்கு வழங்கியுள்ளது.

டேராடூன்,

நீண்ட, ஆரோக்கியமான கூந்தல் என்பது பல தலைமுறைகளாக மக்களை கவர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் இது அழகு. பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தின் அடையா ளமாக கருதப்படுகிறது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியல் தனது நீளமான கூந்தலால் உலக சாதனை படைத்துள்ளார்.

ரேணுவின் கூந்தல் 271.50 சென்டிமீட்டர் (8 அடி 10 அங்குலம்) நீளம் கொண்டது. இதனை அங்கீகரித்துள்ள கின்னஸ் உலக சாதனை நிறுவனம், தற்போது வசித்து வரும் உலகிலேயே அதிக நீளமான கூந்தல் கொண்ட பெண் என்ற சாதனையை அவருக்கு வழங்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது கூந்தலின் நீளம் அளவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம். இதற்கு முன்பு சாதனை படைத்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலியா நசிரோவாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ரேணுவின் சாதனைக்கு பின்னால் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களோ, சிறப்பு சிகிச்சைகளோ இல்லை. தொடர்ந்து கடைப்பிடித்த பராமரிப்பு முறையும், பொறுமையும், இயற்கையான மூலிகைகளுமே தனது நீண்ட கூந்தலுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் தனது கூந்தல் முடியை வெட்டவில்லை என்று ரேணு கூறியுள் ளார். இந்திய பாரம்பரியத்தில் நீண்ட கூந்தல் அழகு. பெண்மை மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படுவதால், அதை தொடர்ந்து வளர்க்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக கடைப்பிடித்த இந்த உறுதி தற்போது அவரை உலக சாதனை படைத்தவராக மாற்றியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com