உத்தரகாசி மேக வெடிப்பால் பெருவெள்ளம்: ராணுவ வீரர்கள் 10 பேர் மாயம் என தகவல்

உத்தரகாண்டில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.
உத்தரகாசி மேக வெடிப்பால் பெருவெள்ளம்: ராணுவ வீரர்கள் 10 பேர் மாயம் என தகவல்
Published on

உத்தர்காசி,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தாராலி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கனமழை பெய்ததால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மலை உச்சியில் இருந்து வந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தர்காசியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, பல வீடுகள், 25 ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்து செல்லப்பட்டன. உத்தரகாண்டில் பேரழிவை ஏற்படுத்திய பகுதியில் மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம், உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுகி என்ற இடத்திலும் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளை அடித்து சென்றது. இதிலும் பலர் மாயமானார்கள்.

இதற்கிடையே, உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஹர்சில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் தெரிந்தாலும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தொடர்ந்து முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com