கொரோனா தடுப்பூசி விவகாரம்: பிரமர் மோடிக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

கொரோனா விவகாரத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்று ராகுல் காந்தி ஆரம்பம் முதலே விமர்சித்து வருகிறார்.
கொரோனா தடுப்பூசி விவகாரம்: பிரமர் மோடிக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாக கையாளத் தவறிவிட்டது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தடுப்பூசியை விரைவு படுத்துங்கள் கால தாமதம் செய்யாதீர்கள் எனப் பதிவிட்டுள்ளார். தனது பதிவோடு இந்தியாவில் 70 சதவீத மவட்டங்களில் 100-பேரில் 20 க்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக வெளியிடப்பட்ட நாளிதழ் செய்தியையும் இணைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியே சிறந்த ஆயுதமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com