

ஆமதாபாத்,
கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இதற்கு ஏற்றவாறு தடுப்பூசி கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குஜராத் மாநிலத்தில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் 16-ந் தேதி(நாளை) வரை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 17-ந் தேதி முதல் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
அதே சமயத்தில், இந்த 3 நாட்களில், ஏற்கனவே பெயர் பதிவு செய்த 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வழக்கம்போல் நடைபெறும் என்று குஜராத் மாநில அரசு கூறியுள்ளது.