குழந்தைகளுக்கு 2-வது கட்ட கோவோவேக்ஸ் சோதனைக்கு அனுமதி; அரசு நிபுணர் குழு பரிந்துரை

2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துறைசார் நிபுணர் குழு நேற்று பரிந்துரையை அளித்தது.
குழந்தைகளுக்கு 2-வது கட்ட கோவோவேக்ஸ் சோதனைக்கு அனுமதி; அரசு நிபுணர் குழு பரிந்துரை
Published on

கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் புனே சீரம் நிறுவனம், 2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2-வது, 3-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கான திருத்தப்பட்ட நடைமுறை அறிக்கையை கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தது.மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஆய்வு செய்த நிபுணர் குழு பரிந்துரையை அளித்துள்ளது.

இந்த பரிந்துரையை தொடர்ந்து ஒப்புதல் அளிக்கப்பட்டபின், 12 முதல் 17 வரை மற்றும் 2 முதல் 11 வயது வரையிலான பிரிவுகளில் தலா 460 குழந்தைகளுக்கு 2-வது கட்ட பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com