

புதுடெல்லி,
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது வெளிநாட்டில் சொத்து வாங்கியதில் முறைகேடான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 5 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று வதேரா அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை. அவரது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்பட்டது. எனவே அமலாக்கத்துறை அடுத்த வாரம் வேறு ஒரு தேதியை ஒதுக்கும் என தெரிகிறது.